×

வட இந்தியாவில் நில அதிர்வு இயல்பானது

புதுடெல்லி: மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘வட இந்தியா மற்றும் நேபாளத்தில் 2022 மற்றும் 2021ல் தலா 41 நில அதிர்வுகளும், 2020ல் 42 நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கடந்த நவம்பர் வரை 3 முதல் 3.9 ரிக்டர் அளவில் 97 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இமயமலை பிராந்தியத்தில் ஆக்டிவ் பால்ட் எனப்படும் நிலநடுக்கத்திற்கு காரணமான பகுதியின் அருகே அமைந்துள்ளதால் நேபாளம் மற்றும் அதனை ஒட்டிய வட இந்திய பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் வழக்கமானதாக இருக்கிறது.
பூமியின் இந்திய தட்டுகளுக்கு கீழே யுரேசியன் தட்டுகள் செல்லும் பகுதியில் மோதல்கள் காரணமாக அடிக்கடி ஒரே அதிர்வெண்ணில் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன’ என்றார்.

The post வட இந்தியாவில் நில அதிர்வு இயல்பானது appeared first on Dinakaran.

Tags : North India ,New Delhi ,Geosciences Minister ,Kiran Rijiju ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...